Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை….!!!!

வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொளி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

Categories

Tech |