தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இந்த வகை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று தெரிவித்தது.ஒமைக்ரான் தொற்று வந்தவர்களுக்கு சில அறிகுறிகள் ஏற்படும். அதன்படி காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று உலக சுகாதார துறை வல்லுநர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
தற்போது வைரஸ் தாக்கினால் உடலில் பல்வேறு அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், புதிதாக ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் காது வலி ஏற்படும் என்று ஸ்டான்போர்ட் பல்கலை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் கூச்சம், தொண்டை கரகரப்பு, உடல் வலி, காய்ச்சல், வாந்தி, இருமல், சளி, சோம்பல், தலைவலி, காதுவலி போன்றவை இருக்கும் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.