Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலை பாதிக்குமா?…. ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் தகவலின்படி ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவும் என்று தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின் படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸை விட 20 லிருந்து 40 மடங்கு குறைவாக இருப்பதாக கூறப்படுகின்றன.

ஆனால் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
இங்கிலாந்தில் மட்டும் 10,000 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு, அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். நாள்தோறும் இங்கிலாந்தில் நோய்த்தொற்று 80,000-ஆக அதிகரித்துள்ளது. சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி அமைப்பின் இயக்குனர் அனுராக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், சார்ஸ் கோவிட் குறித்த எங்கள் ஆய்வில், சுவாரஸ்யமான திருப்புமுனை கிடைத்துள்ளது.

அதாவது உண்மையான சார்ஸ் கோவிட்டைவிட ஏற்படும் பாதிப்பு குறைவு தான். ஆனால் காற்றில் பரவும் பிரதி எடுப்பதும் வேகமாக இருக்கும். நுரையீரலின் மேல் சுவாசப் பகுதியைத்தான் பாதிக்கும் என்பதால் சாதாரண ஜலதோஷம், நிமோனியா இருக்கும். இருப்பினும் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மனிதர்களின் நுரையீரலிருந்து நுரையீரல் திசுக்களை பிரித்தெடுத்து அதில் ஒமைக்ரான் உருமாற்றத்தை மட்டும் ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். டெல்டா வைரஸிலிருந்து வைரஸ் எவ்வாறு மாறுபட்டது? எந்த அளவு பாதிப்பை தருகிறது? தரவில்லை? என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். அதில் டெல்டா வைரஸை விடவும் உண்மையான சார்ஸ் கோவிட்டை விட பிரதி எடுப்பதில் 70 மடங்கு வேகமாக செயல்படுகிறது.

ஆனால் நுரையீரல் திசுக்களை பிரதி எடுப்பதில் சார்ஸ் கோவிட்டை விட 10 மடங்கு குறைவாகவே உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நுரையீரலை உடனடியாக பாதிக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறையின் இணை பேராசிரியர் மருத்துவர் மைக்கேல் சான் சீ-வாய் கூறியதாவது, ஒமைக்ரான் டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்னர், மனிதர்களால் எளிதாக சுவாசிக்க முடியாது. அதற்கு காரணங்கள் உண்டு. வைரஸ் தன்னை பிரதி எடுப்பதில் மட்டும் நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படுவதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை பொறுத்தே அமைகிறது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் குறைவான சக்தியுடையதாக இருந்தாலும் கூட, அதிகமான மக்களை பாதிக்கும் போது நோயின் தீவிரம் அதிகமாகி உயிரிழப்பையும் அதிகரிக்க வைக்கும். எங்களின் ஆய்வில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருந்தாலும்கூட, அதிலிருந்து தப்பிக்கிறது என தெரியவந்துள்ளது.ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த அச்சுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |