ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இது 38 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது எவ்வளவு பரவல் தன்மை கொண்டது, அதற்கான சிகிச்சை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும், மேலும் தடுப்பூசியால் அதனை கட்டுப்படுத்த முடியுமா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க 2 வாரம் ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் சிஎஸ்ஐஆர் மரபியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் இது குறித்து கூறியதாவது, மூன்றாவது அலையை ஏற்படுத்தும் அனைத்து அம்சங்களையும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார் .
மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனவைரஸ் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்பது இரண்டுவார சோதனைக்கு பின்பே அறியப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி என்பது ஒரு சிறந்த ஆயுதம் எனக் கூறியவர் இன்னும் ஒரு சில மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர் இது பாதிப்பு மற்றும் பரவலை தீவிரப்படுத்தும் எனக் கூறியுள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் பரவும் வேகத்தை பார்க்கும்பொழுது இது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வேகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை பொறுத்து இதன் வேகம் மாறுபடும் என கருதப்படுகிறது. தடுப்பூசிகளை மைக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படுவது என்பது முற்றிலும் தவறான கருத்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.