இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ப்ளு பரவலுக்கும் இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது நடந்தது போலவே இப்போது ஒமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலக நாடு முழுவதும் 1928 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனைப் போலவே தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 கோடி பேரின் உயிரை பறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்பானிஸ் ப்ளு இந்தியாவில் 2 அலை இருந்தன. அதில் முதல் மைல்டாக இருந்தது. ஆனால் இரண்டாவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனைப்போல கொரோனா வைரஸ் முதல் அலை பெரிதாக தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலை மிகப்பெரிய உயிர் இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஸ்பானிஸ் புளூ வைரஸ் இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வெறியாட்டம் ஆடிய பின் கட்டுப்பட்டு அப்படியே மறைந்து போய்விட்டது. அதன் பிறகு 3 வது அலை கூட வந்தது என்றாலும் கூட பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. சாதாரண சளி மற்றும் காய்ச்சல் போய்விட்டது. அதனைப்போலவே கொரோனா வைரஸ் தனது வேகத்தை கட்டுப்படுத்த கூடிய வகையில் ஒமைக்ரான் வந்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மூலம் கொரோனாவின் கோரத்தாண்டவம் முடிவு வரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்து ஹெல்த்கேர் மருத்துவ குழுமத்தின் இயக்குனர் டாக்டர் சந்திபீப் புத்திராஜா கூறியது, ஸ்பானிஷ் ஸ்ப்ரூ வைரஸும் கொரோனா வைரஸும் மரபணு மாற்றத்தை கொண்டு உள்ளது. ஸ்பானிஷ் ப்ளு தீவிரம் இரண்டு ஆண்டுகளில் கட்டுக்குள் வந்தது. அதனைப் போலவே கொரோனா வைரஸும் கட்டப்படும் வருகின்றது என்று கருதுகிறோம். இந்த இரண்டு பரவலுக்கும் இடையேயான ஒரு வேற்றுமை உள்ளது.
என்னவென்றால் அப்போது நாம் முன் நம்மிடம் தடுப்பூசி கிடையாது. ஆனால் இன்று நிறைய தடுப்பூசிகள் உள்ளன. மேலும் அப்போது அந்த அளவுக்கு வெளிநாட்டுப் பயணமும் இருக்காது. ஆனால் இப்போது நிறைய வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதால் பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்டமிக் நிலை எட்டும் என்று அவர் கணித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் இதைப்போல செயல்பட்டால் உலகம் முழுதும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.