Categories
உலக செய்திகள்

‘ஒமைக்ரான்’…. WHO சொன்ன மகிழ்ச்சி செய்தி….!!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒரு ஆயுதமாக செயல்பட்டதன் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வகை கொரோனா பரவல்  தற்போது வரை 54 நாடுகளில் பரவியுள்ளது.  இருப்பினும் இந்த தொற்று காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிய கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Categories

Tech |