Categories
தேசிய செய்திகள்

ஒய்வு பெற்ற அதிகாரிகள்…. இவற்றை வெளியிட தடை…!!!

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் அமைப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள், ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட தடைவிதித்து அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. உளவுத்துறை சம்மந்தமான துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுடைய துறை சம்பந்தமான எந்தவொரு விஷயங்களையும் பொதுவெளியில் வெளியிட தடை இருக்கிறது.

ஆனாலும் பல மூத்த அதிகாரிகள் தங்களுடைய பணி காலத்தில் சந்தித்த சவால்கள், ரகசியங்கள் முக்கிய தகவல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் சில சமயங்களில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் விதிகளை மீறி தகவல்களை வெளியிட்டால் ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |