அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒற்றை தலைமை சர்ச்சை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில், அதிமுக சார்பாக கட்டமைப்புகளை மாற்றுவது தொடர்பான மனுக்கள் எதாவது வந்தால் நிராகரிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு புதிய எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்பட்டு அதற்கான கடிதமும் ஈபிஎஸ் தரப்பு மூலமாக கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இரு கடிதம் தொடர்பாக பரிசீலனையில் இருக்கிறது என்றும், இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடப்படும் நிலையில், இரண்டாவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பான முடிவும் கூட சபாநாயகர் சட்டப்பேரவை கூடப்படும் நிலையில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக தன்னுடைய தரப்பிலிருந்து ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்பேரவையிலும் நுழைய வேண்டும் என உறுதியாக இருப்பதை வலியுறுத்தக்கூடிய வகையில், இரண்டாவது கடிதத்தையும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதால் ஈபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.