Categories
தேசிய செய்திகள்

ஒருதலைக் காதல்…. ஓகே சொல்லாததால்…” தாய்,மகள் இருவரையும் கொடூரன்”… போலீஸ் வலைவீச்சு..!!

ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். 50 வயதான சாரதா தேவி தனது மகள் காமினியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த மருமகளையும் அவர்கள் வெட்டி விட்டு சென்று விட்டனர். இதையடுத்து சத்தம் கேட்டு வந்தஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதில் சாரதாதேவியின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

முதல் தகவலில் கோவிந்த் என்பவர் காமினியை  ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும், காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்ததால் அவர் வீட்டிற்கு சென்று கொலை செய்து விட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |