10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வியடைந்ததால் 34 பள்ளிகளை அரசே மூடமுள்ள சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது.அசாம் மாநிலத்தில் உலா மாவட்டத்தில் பல பள்ளிகள் செயல் படுகின்றன. அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாநிலத்தில் 34 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த மாணவர்களுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவிட முடியாது எனக் கூறிய மாநில கல்வி அமைச்சர் ரனோஜ், பள்ளிகளை மூட உள்ளதாக கூறினார்.பல்வேறு அரசு அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைவான செயல்பாடுகளே இந்த முடிவுகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.