இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் மூவருக்கு ஓய்வு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் மார்ச் 4 அன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை யடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 23 அன்று பூனேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
மேலும் தற்போது நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களில் இவர்கள் மூவரும் விளையாட உள்ள நிலையில் தொடர்ந்து அவர்கள் விளையாடினால் மனதளவில் சோர்வடைந்து விடுவார்கள் என்பதால் கிரிக்கெட் போர்டு இவர்கள் மூவருக்கும் ஒருநாள் தொடர் நடைபெறும் பொழுது ஓய்வு கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.