தமிழகத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஜனவரி 14, 15, 16, 18 ஆகிய நான்கு நாட்களும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.