Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் மாநிலம் முழுவதும் முழுமுடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் மத்திய அரசின் போக்கை எதிர்த்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே ரயில் மற்றும் பேருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் செப்டம்பர் 27ஆம் தேதி நாடே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |