திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.
அதனால் திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களும் ஜனவரி 8ஆம் தேதி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.