Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபக்கம் எதிர்ப்பு…. ஒரு பக்கம் ஆலோசனை…. விரைவில் அறிவிப்பு….!!

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில்  நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இதை அடுத்து  800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம்.  இதில் எந்தவித  அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி அளித்துள்ளது.

இருந்ததாலும்  ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்க இருப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன், பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே  800  திரைப்படத்தில்  முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை விஜய் சேதுபதி ஆலோசிக்க இருப்பதாகவும் ,ஓரிரு நாட்களில் இது பற்றி தனது முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.

 

Categories

Tech |