Categories
உலக செய்திகள்

ஒருபக்கம் கொரோனா…. மற்றொரு புறம் அதிபர் தேர்தல்…. மும்முரமான வாக்குப்பதிவு…. தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!!!!

தென்கொரியாவில் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சறுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக அங்கு தினசரி தொற்று பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஒரேநாள் இரவில் 3½ லட்சத்தை நெருங்கி விட்டது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 446 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 52 லட்சத்தை கடந்து விட்டது. அதேபோன்று நேற்று 158 பேர் தொற்றுக்கு பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 9,440 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தென் கொரியாவில் நேற்று அதிபர் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதன்காரணமாக வாக்களிக்க தகுதி பெற்ற 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். கொரோனா தொற்று காரணமாக மக்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்றதாகவும், முந்தைய தேர்தல்களை விட அதிகளவில் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |