Categories
அரசியல்

ஒருபோதும் இது நடக்காது!…. “தமிழக மக்கள் எதிர்த்து நிப்பாங்க”…. சீமான் எச்சரிக்கை….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆரிய மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக மாற்ற முயற்சி செய்யும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் பாஜக அரசின் இந்தி திணிப்பை ஏற்றுக்கொண்டாலும் தமிழர்களும், தமிழகமும் எதிர்த்து நின்று சமரசம் இல்லாது சமர் புரிவோம் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

Categories

Tech |