கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகள் வீடுகளில் இருப்பதால் சிறிய பொருட்களை மிழுங்கிவிடுகிறது. தீக்காயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் வந்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஏழு நாட்களான குழந்தை உட்பட 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கொரோனா காலத்தில் அதிக பிரசவங்கள் நடைபெறுவதால் மதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.