Categories
தேசிய செய்திகள்

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பு… இவ்வளவாக குறைக்கணும்?…. ஐகோர்ட் பரிந்துரை….!!!!ஃ!

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்து உள்ளது.

அண்மை காலமாக கர்நாடகாவில் சிறார் குறித்த பாலியல் ரீதியிலான குற்றங்கள் காதலில் துவங்கி பாலியல் வன் கொடுமையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகிறது. ஆகவே இவ்வகை சிறார்கள் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக பள்ளிகளில் 9வது வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோசட்டம் தொடர்பாக கற்பிக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன் பாலியல் குற்றம் மற்றும் அதனால் வழங்கப்படும் தண்டனைகளும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக பாடம் நடத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.பசவராஜா போன்றோர் அடங்கிய அமர்வு ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது பற்றி பரிசீலனை செய்ய சட்ட ஆணையத்திற்கு பரிந்துரைத்து இருக்கிறது.

Categories

Tech |