தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இதே சூழ்நிலை நீடித்தால் வருங்காலத்தில் அனைவரும் மின்சார வாகனத்தையே பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஆடி நிறுவனம் ஜூலை 22ஆம் தேதி மூன்று மின்சார கார்களை வெளியிடுகிறது.
ஒரு முறை இதனை சார்ஜ் செய்தால் போதும். ஆடி E Tron 50, 264 – 375 km, ஆடி E Tron 55, 359 – 484 km, தூரம் செல்லும் திறன் கொண்டது. அதிவிரைவு சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம் என்று கூறியுள்ளது. மூன்று கார்களும் ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.