Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை தவணை செலுத்தினால் போதும்… மாதம் மாதம் பென்ஷன் வீடு தேடி வரும்… அறிமுகமாகும் எல்ஐசியின் புதிய திட்டம்…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இதில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்கின்றனர். எல்ஐசி என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று மக்கள் கருதுகின்றனர். இந்த நிறுவனம் பல திட்டங்களை கொண்டுள்ளது. தற்போது ஜீவன் சாந்தி எனும் புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது இந்த மாதம் 21ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், எல்ஐசி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த பாலிசியில் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ஓய்வு பெற்ற பிறகு மாதம் மாதம் பென்ஷன் பெறலாம். ஒரு வேளை நீங்கள் இதை செய்ய விரும்பவில்லை என்றால் உடனடியாக ஓய்வு ஊதியம் பெறவும் முடியும். இந்த பாலிசியில் முதிர்ச்சி காலத்தில் பென்ஷன் பெறுவதற்கும், இல்லையெனில் பாலிசியில் சேர்ந்தவுடன் பென்ஷன் பெறுவதற்கும் ஆப்ஷன் உள்ளது. இது இரண்டு விதமான திட்டங்களை கொண்டுள்ளது. முதலாவது தனிநபர் வாழ்க்கை. பாலிசிதாரர் இறந்தபிறகு அவர் செலுத்திய பணமானது அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். இரண்டாவது திட்டம் கூட்டு வாழ்க்கைக்காணது.

இதில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் பொழுது அவருக்கு பென்ஷன் வழங்கப்படும். பாலிசிதாரர் இறந்த பிறகு அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் 1.50 லட்சம் ரூபாயிலிருந்து கணக்கை தொடங்க முடியும். இந்த பாலிசியில் 30 – 79 வயது உள்ளவர்கள் இணையலாம். கூட்டு வாழ்க்கை திட்டத்தில் இணைபவர்கள் திட்டத்தில் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து பென்சன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் இணையலாம். மேலும் தகவல்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Categories

Tech |