இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி “வியூ ஒன்ஸ்” என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஒருவர் அனுப்பும் புகைப்படமோ, காணொளியோ ஒருமுறை பார்த்ததும் தானாக டெலிட் ஆகி விடும். அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அதை பெறுபவர்களின் ஸ்மார்ட்போனில் பதியப்பட்டது. ஆனால் அந்த புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க இயலும். தற்போது ios கருவிகளில் மட்டும் இந்த வசதி வெளியாகியுள்ளது.