இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அந்நபர் இறந்த பின் அவரது நாமினிக்கு அடிப்படை பிரீமியம் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கவரேஜ் இருக்கிறது. இவற்றில் கணவர் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அவர் இறந்த பின் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். பின் மனைவியும் இறந்த பின் அவர்களால் நியமிக்கப்பட்ட நாமினிக்கு அடிப்படை பிரீமியத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய தொகையாக குறைந்தபட்சம் ரூபாய்.1000 (அ) ரூ.12000 வரை தேர்வுசெய்யலாம்.
இவற்றில் அதிகபட்ச வரம்பு எதுவுமில்லை. 40 வயதில் ஒருவர் ரூபாய்.10 லட்சம் பிரீமியமாக டெபாசிட் செய்து இருந்தால், ஆண்டுக்கு ரூ.50250 என வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இத்திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையை இடையிலேயே திரும்பப் பெற விரும்பினால் மொத்த பணத்தில் 5 % கழிக்கப்பட்டு, மீதம் உள்ள தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 80 வயது வரை இருக்கவேண்டும். இந்த திட்டத்தில் பங்களித்த 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். மாதந்தோறும் (அ) காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம்.