Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவரிடம் மோதினால் 10 பேரிடம் மோதின மாதிரி…. கே.எல்.ராகுல் பேட்டி…..!!!!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து  பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான்.

போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் அவருக்குப் பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம்” என எச்சரித்துப் பேசினார். மேலும், “நாங்கள் பந்துவீசும்போது உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். இதனால்தான், எங்களால் (இந்திய அணியால்) வெற்றிபெற முடிந்தது” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |