இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவர், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைப்பதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் கூடும் இடங்களில் அதாவது பொது இடங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவரையும் பரிசோதித்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.