Categories
தேசிய செய்திகள்

ஒருவர் இறந்த பிறகு…. அவரது கணக்கில் பணத்தை…. ATM-ல் எடுக்க முடியுமா…??

ஏடிஎம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் எளிதான முறையாகும். தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.அவ்வாறு பணம் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வேறு  ஒரு நபரின் பெயரில் மாற்றப்படும் வரை அந்த பணத்தை எதுவும் செய்ய முடியாது.

இறந்தவரின் நாமினி முழு செயல்முறையும் முடித்தபிறகு பணத்தை எடுக்க முடியும். இறந்தவரின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிகளில் சென்று கேட்கலாம். இதற்காக அவர்கள் படிவத்தை நிரப்ப வேண்டும் இதனுடன் இறந்தவரின் ஏடிஎம் கார்டை ஒலிப்புத்தகம் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், அவரது ஆதார் அட்டை, பேன் கார்டு, போன்ற முக்கிய ஆவணங்களை  சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இறந்தவரின்  பணம் நாமினிக்கு மாற்றப்பட்டு அந்த  கணக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |