பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார், இனி நடக்க வேண்டியது அதுவே நடக்கும் என்று ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டதால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து இன்று சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பி விட்டார், இனி நடக்க வேண்டியது நடக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும் 200 இடங்கள் என்று ஏற்கனவே சொன்னேன்,அது தவறு 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் சூடு வைத்துள்ளார்.