தமிழகத்தில் நேற்று மட்டும் 4,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 3,035 பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 92,567ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 2,032 ஆக எகிறியது.
தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,140 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3000த்திற்கும் அதிகமானோர் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 36 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டத்திலும் நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று அரியலூர் தவிர அனைத்து மாவட்டமும் கொரோனவால் பாதிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாள் நோய் தாக்கம் இல்லாதது அரியலூர் மாவட்ட மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இதே நிலை தொடர வேண்டும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 513 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்ததால் 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.