Categories
தேசிய செய்திகள்

ஒருவர் மடியில் ஒருவர்…..! கேரள மாணவர்களின் நூதனப் போராட்டம்….. அதிர வைக்கும் பின்னணி காரணம்….!!!

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் தற்போது போலீசாருக்கு எதிராக நூதன முறையில் போராட்டத்தை தொடங்கி அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். திருவனந்தபுரத்தின் சி இ டி மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் அங்கு சென்றிருந்தபோது இரும்பு பெஞ்சை துண்டு துண்டாக வெட்டி மூன்று நாற்காலிகளாக மாற்றி வைத்திருந்தனர்.

இதனால் ஒருவர் அருகருகே உட்கார முடியாமல் ஒருவர் மட்டும் இருக்கையில் அமரும்படி வடிவமைக்கப்பட்டது. இதன் காரணமாக சிஇடி கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மாணவ மாணவியர்கள் அருகருகே உட்காரக்கூடாது என்ற நோக்கில் சிலர் இப்படி செய்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கேரளாவில் 280 பெண் பள்ளிகளும், 164 ஆண் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒளித்து விட்டு அந்தப் பள்ளிகள் அனைத்தையும் கலப்பு பள்ளிகளாக மாற்றி இணைய கல்வி அமல்படுத்த வேண்டும் என்று கல்வித்துறைக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

Categories

Tech |