Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று முதல் தமிழக முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச நூறு யூனிட், கைத்தறி மற்றும் விசைத்தறி மானியத்தில்,குடிசை மற்றும் விவசாய இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஒரு ஆதாரை வைத்து பத்து மின் இணைப்பு கூட இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள் அவர்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |