Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒருவாட்டி செஞ்சதே தப்பு இதுல மறுபடியுமா…. சிசிடிவி கேமராவில் தூக்கிய ஊழியர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேலூரிலிருக்கும் நகைக்கடைக்கு சென்று மோதிரத்தை திருடி சென்றுள்ளார். இவரின் இச்செயலை கடையின் ஊழியர்கள் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பார்த்தனர்.

இதில் ஊழியர்கள் அவரை அடையாளம் கண்டு வைத்த நிலையில் வெற்றிவேல் மீண்டும் அதே கடைக்கு நகை எடுப்பது போல் சென்றதையடுத்து, நகையை திருட முயன்றிருக்கிறார். அப்போது கடையிலிருக்கும் அனைவரும் அவரை கையும் களவுமாக பிடித்ததோடு மட்டுமின்றி மேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெற்றிவேலை கைது செய்து அவரிடமிருந்த நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள்.

Categories

Tech |