Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை அப்படி இருக்குமோ…? சந்தேகப்பட்ட காவல்துறையினர்… தீவிர கண்காணிப்பு பணி…!!

டிரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செம்மணாம்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில் காவல்துறையினர் அந்த வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின் காவல்துறையினர் அப்பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதனையடுத்து சோதனை செய்த போது அந்த வனப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாததால் காவல்துறையினர் அங்கிருந்து திரும்பி உள்ளனர்.

Categories

Tech |