மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவபுரி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது மற்றும் கறி விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியில் அந்த ஆசிரியர் குடித்துவிட்டு மது போதையில் இருந்ததாகவும் உள்ளூர் வாசிகளுடன் சண்டைக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர்களுக்கு அனைத்து நல்லொழுக்கங்களையும் கற்றுத் தரக்கூடிய ஒரு ஆசிரியரே இப்படி நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.