ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் மீரா என்பவர் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு, மாணவி கல்பனாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் இம்முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இது அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதனிடையில் மீரா தன் பெயரை பிறகு, ஆரவ் குந்தல் என மாற்றியுள்ளார்.
அரசு பள்ளி ஒன்றில் கபடி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரான ஆரவ்விடம் (மீரா), கல்பனா பல வருடங்களாக கபடி பயின்று வந்தததாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து ஆரவுக்கும் (மீராவுக்கும்), கல்பனாவுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் 2018ம் வருடத்தில் ஆசிரியர் ஆரவ் (மீரா), கல்பனாவிடம் தன் காதலை கூறியுள்ளார். அதற்கு கல்பனாவும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆரவ்(மீரா) அந்த அறுவைசிகிச்சை செய்துகொண்டு, ஆணாக மாறி திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆரவ் (மீரா) அளித்த பேட்டியில், தான் சிறுவயதில் இருந்தே தன்னை ஓர் ஆணாகவே உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். சென்ற 2019ம் வருடம் தொடர் அறுவை சிகிச்சையை தொடங்கிய ஆரவ் (மீரா), 2021ம் ஆண்டு அவரது கடைசி அறுவை சிகிச்சையை செய்துகொண்டு, தற்போது மாணவியை திருமணம் செய்து நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.