தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டு, அதற்கான சான்றிதழை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.