Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆடு 1 கோடிப்பே… ஆத்தி அடியாத்தி!… அப்படி என்ன ஆடு அது?…!!!

மும்பையில் ஆடுகள் விற்பனை சந்தைக்கு வந்த ஆடு ஒன்று 1.5 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆடு விற்பனை சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆடும்  குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான ஆடுகளை இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். அதன்படி மும்பையில் உள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் மோடி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று விற்பனைக்கு வந்தது. மோடி என்ற பெயரைக் கொண்டதால் ஆட்டை வாங்க பலரும் போட்டி போட்டனர்.

அந்த ஆடு ஏலம் விடும் போது கிட்டத்தட்ட 70 லட்சம் வரையில் ஏலம் போனது. ஆனால் அந்த ஆட்டின் உரிமையாளர் 1.5 கோடிக்கு தான் ஆட்டை விற்பேன் என்று பிடிவாதம் பிடித்ததால் இறுதியில் அதை எவரும் வாங்கவில்லை. அதனால் அந்த ஆடு உரிமையாளர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். தமிழ் திரைப்படம் ‘வருத்த படாத வாலிபர் சங்கம்’ படத்தில் மிகவும் பிரபலமான வசனம் “ஒரு கோடிப்பே”. அதனை போலவே ஒரு ஆடு ஒரு கோடிப்பே என்று இணையதள வாசிகள் இதனை டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Categories

Tech |