Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஒரு ஆண்டாக முயற்சி பண்ணினேன்” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தரணி குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான தனசேகர் கடந்த 1 ஆண்டாக வேலை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தனசேகர் தான் குடியிருந்து வந்த வாடகை வீட்டின் 3-வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனசேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |