மக்களிடம் 50 கோடி மோசம் செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
போட்ட பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய நிதி நிறுவன பங்குதாரர்கள் ஆன கோவையை சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த 52 வயதான மணிகண்டன், ஆன்லைன் மூலமாக கிரீன் கிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் டெபாசிட் செய்த பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என வாக்கு தந்தார்.
சில மாதங்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். 50 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் குவிந்தது. பலருக்கு டெபாசிட் செய்த தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இரண்டு மாதத்திற்கு முன் மணிகண்டன் மற்றும் நிறுவன பங்குதாரர் சஞ்சய்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் மணிகண்டனின் மனைவி 45 வயதான பத்மாவதி மற்றும் மகள் 25 வயது சரண்யா ஆகியோரும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர்கள். இந்நிலையில் இவர்கள் நேற்றுமுன்தினம் தலைமறைவாக இருந்த பத்மாவதி மற்றும் சரண்யா ஆகியோரை கைது செய்தனர்.