Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டு கால கோரிக்கை…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்….. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது மகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவரின் மனைவி சித்ரா என்பதும், அவரது மகள் சுவாசிக்கா(10) என்பதும் தெரியவந்தது.

இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை பட்டா வழங்காததால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றதாக சித்ரா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசாரின் அறிவுரைப்படி சித்ரா தனது மகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியேள்ளது.

Categories

Tech |