தமிழகத்தில் எடப்பாடி அரசு ஒரு உதயநிதிக்கே பயந்து விட்டதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அவர் இரண்டு நாட்களாக போலீஸ் தடையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று குற்றாலத்தில் அவர் அனுமதியின்றி பரப்புரை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு உதயநிதிக்கு எடப்பாடி அரசு பயந்து விட்டதா? கலக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய் லட்சோபலட்சமாய் லட்சிய கொடியை கையில் ஏந்தி களத்தில் அடுத்தடுத்து அனைத்திலும் போது என்ன செய்யப் போகிறீர்கள்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.