தமிழக அரசின் நிதித்துறை வளாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் இது போன்று அறிக்கைகள் வெளியிடும்போது குறைந்தபட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன் .
அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு தனித்தனி பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்கு பல எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். அம்மா வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்திற்கு தான் பெரியார் கா அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.