Categories
தேசிய செய்திகள்

ஒரு கப் டீயின் விலை… ரூ.1000மாம்… அப்படி என்ன இருக்கு அதுல…? அந்த கடை எங்க இருக்கு…? வாங்க பார்க்கலாம்..!!

ஒரு டீக்கடையில் ஒரு கப் டீ யின் விலை ரூபாய் 1000 ரூபாயாம் அப்படி அந்த டீயில் என்ன இருக்கிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

காலையில் எழுந்தவுடன் டீ காபி சாப்பிட்டால் தான் அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்பது சிலரின் கருத்து. ஒரு டீக்கடையில் ஒரு டீயின் விலை அதிகபட்சம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் இருக்கும். அதற்கு மேல் 15 ரூபாய் வரைக்கும் இருக்கும். ஆனால் இந்த டீக்கடையில் ஒரு டம்ளர் டீயின் விலை ஆயிரம் ரூபாயாம்.

இதை கேட்டால் தலை சுற்றுகிறதா? ஆம் கொல்கத்தாவில் வசிக்கும் பார்த்தா பிரதீப் கங்குலி என்பவர் 2014ஆம் ஆண்டு ஒரு டீ கடையை தொடங்கினார். ஒரு கப் டீ யின் விலை ரூபாய் 12 முதல் 1000 வரையிலான பல்வேறு வகைகளில் டீகளை விற்பனை செய்து இருக்கிறார். இந்த டீக்கடை மேற்குவங்கத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான டீ தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் அந்த தேனீரின் பெயர் போ-லே.  இந்த தேயிலையின் விலை ஒரு கிலோவுக்கு 3 லட்சம் ரூபாய். அதனால்தான் இந்த தேயிலையில் இருந்து தயாரிக்கப்படும் டீக்கு இவ்வளவு விலை வாங்குகிறார்கள்.

Categories

Tech |