Categories
Uncategorized

“ஒரு கப் டீ 70 ரூபாய்” ஷாக்கான ரயில் பயணி….. இதற்கு இவ்ளோ விலை தெரியுமா….????

கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?” என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |