Categories
மாநில செய்திகள்

ஒரு கரும்பு 15,000…. ஒரு எலுமிச்சை 40,000 மா…. என்ன பா சொல்லுறீங்க…. பொங்கல் விழாவில் வினோத சம்பவம்….!!!

சிவகங்கை மாவட்டம் அருகே ஒரு எலுமிச்சை பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கரும்பின் விலை 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், விற்பனையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மேலத்தெரு, கீழத்தெரு பகுதியில் வெள்ளை சேலை அணிந்து கொண்டு நேற்று ஊர் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அந்த ஊரில் காவல் தெய்வமான பிடாரியம்மன், பொன்னழகி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு ஆகியவற்றை தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து கோயில் வாசலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்தி கடனாக தொட்டிலில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் அம்மன் காலடியில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தையும், கரும்புகளையும் ஏலத்தில் விட்டன.

இதனை ஏராளமான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். அம்மன் சன்னதியில் இருந்த கரும்பினை ஏலத்தை எடுத்தால், நினைத்த காரியம் கைகூடும் என்றும், எலுமிச்சை பழத்தை எடுத்தால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என்று அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்க தொடங்கினர். அதில் மேலத்தெருவில் நடந்த இடத்தில் ஒரு கரும்பு 17 ஆயிரத்து 307 ரூபாய்க்கு ஏலம் போனது. அதேபோல் கீழத்தெருவில் நடந்த இடத்தில் ஒரு எலுமிச்சம்பழத்தை ஜெயக்குமார் என்பவர் 40,001 ரூபாய்க்கு வாங்கினார். ஒரு கரும்பு 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். இந்த சம்பவம் அனைத்து மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |