Categories
அரசியல்

ஒரு கல்லு கூட வைக்காம…. மாணவர்களை சேர்க்க சொன்னா…. எப்படி முடியும்..? பி.டி.ஆர் விமர்சனம்…!!!

மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஒரு கல் கூட வைக்காமல், நிலத்தை தோண்டாமல் மாணவர் சேர்க்கை எப்படி நடத்த முடியும். நான் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு எதுவுமே செய்யவில்லை என்றால் எப்படி மாணவர்களை சேர்க்க முடியும்.

ஏற்கனவே இருக்கிற கல்லூரிகளில் இடம் இருந்திருந்தால் இந்நேரம் ஏற்கனவே மாணவர்களை சேர்த்து இருப்போம். நீங்கள் உருவாக்க போகும் கல்லூரியில் நிதியும் ஒதுக்காமல் கட்டடமும் கட்டாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றால் மாணவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்போம்? என்று கூறியுள்ளார். இது இங்கே மட்டும் இல்லை மத்திய அரசால் எத்தனை இடங்களில் எய்ம்ஸ் ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்களோ, அங்கு போய் பார்த்தால் நடக்கவில்லை. இது மதுரைக்கு மட்டுமல்ல. நாடு முழுவதும் நடக்கவில்லை கட்டடமே  என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |