Categories
உலக செய்திகள்

ஒரு காஃபிக்கு 5 நிமிஷமா…? பெண்ணின் செயலால் கடை ஊழியர்கள் ஷாக்…. வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரபல கடை ஒன்றில் காபி குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் காபி ஆர்டர் செய்த பின்னர், காஃபி கொண்டு வருவதற்கு 5 நிமிடங்கள் ஆகும் என்று கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்து கீழே போட்டு உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்தப் பெண் அவ்வாறு பொருட்களை எடுத்து கீழே போட்டதற்கு காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தொழிலில் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக மிரட்டிய உடன் தான் ஒரு சர்க்கரை நோயாளி என்றும் தனக்கு சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் அந்தப் பெண் கூறியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |