ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு தனது முதல் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராஜக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆப்பிள் கார் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் காரில் சன்ரூஃப் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை ஒன்றை வழங்கி இருக்கிறது.
2014ஆம் ஆண்டு முதல் தயாராகி வரும் இந்த கார் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். எடுத்துக்காட்டாக நமது செல்போனில் பயன்படுத்தப்பட்டுவரும் கொரிலா கிளாஸ் போன்று, காரின் புற அமைப்புகள் அனைத்தும் கிளாஸ் மாதிரியான அமைப்புகளுடன் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கூறும்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கார் மோதினாலும் காருக்கு எதுவும் ஆகாதாம். அதுமட்டுமில்லாமல் கார் சுற்றி டிஸ்ப்ளே போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால், நமக்கு எப்படிப்பட்ட புகைப்படம் வேண்டுமோ அதை நாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இந்த டெக்னாலஜி பிஎம்டபிள்யூ காரின் ஐஎப் M60 மாடலின் அட்வான்ஸ் டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் எந்த ஒரு நிறுவனத்தில் இறங்கினாலும் அங்கு அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பார்கள். அந்த வகையில் 2025ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்த காருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.