கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள கேஜிஎஃப்-2 வெளியான எட்டே நாட்களில் உலகளவில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. கேஜிஎப்-2 திரைப்படம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏனென்றால் நடிகர் யஷ்ஷின் வெறித்தனமான நடிப்பின் காரணமாக பல்வேறு ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது. இந்த திரைப்பட த்தில் அம்மா சென்டிமென்ட்டை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக காட்டி இருக்கிறார்கள். மேலும் கேஜிஎப் படத்தின் முக்கியமான காரணம் எடிட்டிங் மற்றும் பீஜிஎம் மட்டும்தான். இந்தப் படத்தில் வெறித்தனமாக பீஜியம் போட்ட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஒரு காலத்தில் 35 ரூபாய்க்கு வேலைக்கு சென்றார் என்பது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. இருந்தாலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த ரவி பஸ்ரூருக்கு கேஜிஎஃப் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ரவி பஸ்ரூர் தன்னால் முயன்றவரை உழைத்து, கஷ்டப்பட்டு கேஜிஎப் படத்தில் வருகிற ஒவ்வொரு பீஜியத்தையும் வேற லெவலில் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.