Categories
தேசிய செய்திகள்

ஒரு கிலோ எலுமிச்சை பழம் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

எலுமிச்சை பழத்தின் விலை வழக்கத்தை விட அதிக அளவு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குஜராத்தில் இருக்கும் ராஜ்கோட் பகுதியில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்தச் சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எலுமிச்சை பழத்தின் விலை திடீரென எதிர்பார்ப்பை விட அதிக அளவு உயர்ந்துள்ளது.

அதாவது ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கோடை காலம் தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். மேலும் இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.

Categories

Tech |