திண்டிவனம் அருகில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டிவனம், நொளம்பூர் கிராமம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நொளம்பூர் ஏரிக்கரை அருகில் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர் நொளம்பூர் இந்திரா நகரில் வசித்து வந்த சிவா என்பவருடைய மகன் அன்பழகன்(22) என்பதும், அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.